திருவள்ளுவர் கல்லூரியும் நானும்....
2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் தேதி திருவள்ளுவர் கல்லூரியில் வைத்து நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினேன். தேசிய தர நிர்ணய குழுவின் முன்னிலையில் கல்லூரியின் வளர்ச்சி பற்றி சிறப்பாக எடுத்துச் சொன்னதாக நினைவு. மலரும் நினைவுகளாக என் கல்லூரி காலம் தாலாட்டியது. உணர்ச்சி பெருக்கு என் உள்ளத்தில் ஊற்றுப்போல பொங்கியது... ஊற்றினை எங்காவது அணை போட வேண்டும் என்பதால் இந்த வலைப்பூ தளத்தில் இறக்கி வைக்கிறேன் என் உள்ளத்து உணர்வுகளை வாசிப்பீர் நண்பர்களே குறை இருந்தால் தெரிவிக்கவும்... பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்க வேண்டும் என்ற எந்த முன்னறிவும் இல்லாத குடும்ப சூழல் . அருகில் இருக்கக்கூடிய திருவள்ளுவர் கல்லூரி தான் நான் செல்ல வேண்டிய நிலம் என்பதை இறைவன் எனக்கு அறிவித்தான்.