நானும் - நூலகமும்
பொதிகை வாசகர் வட்டம் கொடுத்த சிறப்பு விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலகத்தில் தன்னார்வ வாசகர்கள் இணைந்த ஓரு அமைப்பு பொதிகை வாசகர் வட்டம் செயல்படுகிறது. 2024 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் வாசகர்வட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. என் இளங்கலைத்தமிழ்ப் பேராசிரிர் திரு.பா. வல்சகுமார் பொருளாளர் ஆக என்னை முன்மொழிந்தார் . வாசகர்வட்ட கூட்டம். இதுவரை சமுதாயப் பணியை மக்களிடம் இருந்து விலகி மாணவர்களிடம் மட்டுமே செயல்படுத்திக் கொண்டிருந்த நான் நூலகத்துடன் இணைந்தேன். சிறு வயது முதலே சாதி மதம் பேதம் இல்லாமல் வளர்ந்த எனக்குப் பொதுமக்களில் ஒருவனாக இருந்து நூலகத்தில் பயணிப்பது கடினமாக இல்லை. வாசகர்வட்ட உறுப்பினர்கள் வீடுகளில் நடக்கும் விழாக்களில் முழு மனதோடு கலந்து கொள்ள ஆரம்பித்தேன். நூலகங்களில் நடக்கும் விழாக்களில் அதிகம் கலந்து கொண்டு விடுவேன் ... சில நேரங்களில் சேர முடியாமல் போய்விடும். நூலக வார விழா - 2024 ல் நடந்த பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள 17.11.2...