நானும் - நூலகமும்
பொதிகை வாசகர் வட்டம் கொடுத்த சிறப்பு
விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலகத்தில் தன்னார்வ வாசகர்கள் இணைந்த ஓரு அமைப்பு பொதிகை வாசகர் வட்டம் செயல்படுகிறது.
2024 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் வாசகர்வட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. என் இளங்கலைத்தமிழ்ப் பேராசிரிர் திரு.பா. வல்சகுமார் பொருளாளர் ஆக என்னை முன்மொழிந்தார் .
இதுவரை சமுதாயப் பணியை மக்களிடம் இருந்து விலகி மாணவர்களிடம் மட்டுமே செயல்படுத்திக் கொண்டிருந்த நான் நூலகத்துடன் இணைந்தேன்.
![]() |
| வாசகர்வட்ட கூட்டம். |
இதுவரை சமுதாயப் பணியை மக்களிடம் இருந்து விலகி மாணவர்களிடம் மட்டுமே செயல்படுத்திக் கொண்டிருந்த நான் நூலகத்துடன் இணைந்தேன்.
சிறு வயது முதலே சாதி மதம் பேதம் இல்லாமல் வளர்ந்த எனக்குப் பொதுமக்களில் ஒருவனாக இருந்து நூலகத்தில் பயணிப்பது கடினமாக இல்லை.
வாசகர்வட்ட உறுப்பினர்கள் வீடுகளில் நடக்கும் விழாக்களில் முழு மனதோடு கலந்து கொள்ள ஆரம்பித்தேன். நூலகங்களில் நடக்கும் விழாக்களில் அதிகம் கலந்து கொண்டு
விடுவேன் ... சில நேரங்களில் சேர முடியாமல் போய்விடும்.
நூலக வார விழா - 2024 ல் நடந்த பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள 17.11.24 மாலை 4 மணிக்கு நூலகம் வந்து விட்டு சொந்த வேலை காரணமாக கிளம்பிவிட்டேன். அதிகமான வாசகர் வட்ட உறுப்பினர்கள் பணி நிறைவு பெற்றோர். கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்வார்கள்.
18.11.24 திங்கட்கிழமை நான் மாலை 5 மணிவரை பள்ளி வேலை முடித்து வீட்டிற்கு வந்தேன். திடீரென நூலகர் பே.குமார் அவர்கள் தொலை பேசியில் அழைத்து நம் வாசகர் வட்டத்திற்கு 2024 ஆம் ஆண்டுக்கான நூலக ஆர்வலராக திருநெல்வேலி மாவட்ட அளவில் விருது வழங்கப்பட உள்ளது. அதற்கான வழங்கும் விழா நாளை நடைபெற உள்ளது. நாங்கள் போய்க் கொண்டிருக்கிறோம் நீங்கள் வருகிறீர்களா? என்றார். என் கண்முன் பள்ளியும் மாடும் வந்து சென்றது. "சார் வரவில்லை" என்று கூறிவிட்டேன். அதன் பின் 5-10 மணிக்கு வாசகர் வட்டத் தலைவர் திரு.கா.மைதீன் பிச்சை அவர்களிம் இருந்தும் அழைப்பு வந்தது. மறுக்க முடியாமல் கிளம்பி விட்டேன். அம்பாசமுத்திரம் வழியாக திருநெல்வேலி வரை செல்லும் இரயில் ஏறி திருநெல்வேலியில் ஒன்றாம் பிளாட்பார்மில் நின்ற நெல்லை எக்ஸ்பிரஸின் AC பெட்டியில் நுழைந்தேன். என் கையில் பயணச்சீட்டு கிடையாது.. தலைவர் உடனடியாக முன்பதிவு செய்யாத பெட்டிக்கு இரண்டு பயணச்சீட்டு வாங்கிக் கொண்டார். எப்படியாவது பின்புறத்தில் உள்ள முன்பதிவில்லாத பெட்டிக்கு வந்துவிட வேண்டும் எனக் கூறினார்.
Ac பெட்டிக்குள் இருந்து முன்பதிவு செய்யப்படாத பெட்டிக்குள் நகர இரயிலும் நிலையம் வீட்டு நகர்ந்து வேகம் பிடித்தது. பிறகு
கோவில்பட்டி இரயில் நிலையம் வந்ததும் இணைந்து கொண்டோம்..
விடிய விடிய விழித்திருந்து காலை இரயில் நிலையத்தில் நூலகர் மற்றும் செயலாளர் பே.குமார் அவர்களுடன் சேர்ந்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பாராட்டு பட்டயம் பெற்றோம்.


கருத்துகள்
கருத்துரையிடுக