இடுகைகள்

படம்
  ஆய்வுச்சுருக்கம்:       இக்கட்டுரையானது மலையாள படைப்பாளியாக அறிய்பட்ட வைக்கம் முகமது பஷீர் அவர்களின் படைப்புத்திறன் உத்திகள் பற்றிய அறிவையே வெளிப்படுத்துகிறது.  அவரது படைப்புகளில் பால்ய கால சகி என்ற நாவல் சிறப்பானதாகும்.  தமிழில் காலச்சுவடு பதிப்பகம் மூலம் மொழிபெயர்ப்பாக வந்திருக்கும் இக்குறு நாவல்  பஷீர் அவர்களின் படைப்பளுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.  தொல்காப்பியம் நூலுக்குரிய உத்திகள் 32 எனக்கூறுகிறது.  அக்காலத்திய உத்திகளே ஆனாலும் நாம் தற்கால நாவல்களுக்கும் பொருத்திப் பார்த்து அடையாளப்படுத்துவதே நோக்கமாகும்.  மொழிபெயர்ப்பின் வெற்றிக்குக் காரணம் மூலபடைப்பில் ஆசிரியர் கையாண்டிருக்கும் உத்திகளின் வெளிப்பாடுகளாகும்.   பால்யகால சகி என்னும் குறுநாவல் பின்னோக்கு உத்தியில் புனையப்பட்டதாகும்.  “பல்வகைச் சிறப்படை இலக்கியம் கருத்து அல்லது பொருளை அடிப்படையாக உடையது.  அக்கருத்து தகுந்த சொற்களாலும் ஏற்புடைச்செய்யுள் அல்லது உரைநடை வடிவாலும் ஒரு படைப்பாக உருக்கொள்கிறது.  வெளியீட்டுத்திறனும் முழுவமைப்புக்குச...

திருக்குறள் அறக்கட்டளை நடத்திய திருவள்ளுவர் தினம்

படம்
 16-01-2026 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அம்பாசமுத்திரம் வேல்சாமி திருமண மண்டபத்தில் வைத்து கவியரங்கம் நடந்தது. உண்மையாய் ஆண்டில் வருவது என்ற தலைப்பில் கவிதை வாசித்தேன். வாசகர் பெருமக்களால் இருந்தவர்களது தமிழ் பருகும் ஆர்வம் வியப்பில் ஆழ்த்தியது.

நானும் - நூலகமும்

படம்
பொதிகை வாசகர் வட்டம் கொடுத்த சிறப்பு       விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலகத்தில் தன்னார்வ வாசகர்கள் இணைந்த ஓரு அமைப்பு பொதிகை வாசகர் வட்டம் செயல்படுகிறது.       2024 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் வாசகர்வட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.   என் இளங்கலைத்தமிழ்ப் பேராசிரிர் திரு.பா. வல்சகுமார் பொருளாளர் ஆக என்னை முன்மொழிந்தார் . வாசகர்வட்ட கூட்டம்.      இதுவரை சமுதாயப் பணியை மக்களிடம் இருந்து விலகி மாணவர்களிடம் மட்டுமே செயல்படுத்திக் கொண்டிருந்த நான் நூலகத்துடன் இணைந்தேன்.      சிறு வயது முதலே சாதி மதம் பேதம் இல்லாமல் வளர்ந்த எனக்குப் பொதுமக்களில் ஒருவனாக இருந்து நூலகத்தில் பயணிப்பது கடினமாக இல்லை.      வாசகர்வட்ட உறுப்பினர்கள் வீடுகளில் நடக்கும் விழாக்களில் முழு மனதோடு கலந்து கொள்ள ஆரம்பித்தேன்.   நூலகங்களில் நடக்கும் விழாக்களில் அதிகம் கலந்து கொண்டு விடுவேன் ... சில நேரங்களில் சேர முடியாமல் போய்விடும்.      நூலக வார விழா - 2024 ல் நடந்த பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள 17.11.2...

திருவள்ளுவர் கல்லூரியும் நானும்....

படம்
 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் தேதி திருவள்ளுவர் கல்லூரியில் வைத்து நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினேன். தேசிய தர நிர்ணய குழுவின் முன்னிலையில் கல்லூரியின் வளர்ச்சி பற்றி சிறப்பாக எடுத்துச் சொன்னதாக நினைவு.  மலரும் நினைவுகளாக என் கல்லூரி காலம் தாலாட்டியது.  உணர்ச்சி பெருக்கு என் உள்ளத்தில் ஊற்றுப்போல பொங்கியது... ஊற்றினை எங்காவது அணை போட வேண்டும் என்பதால் இந்த வலைப்பூ தளத்தில் இறக்கி வைக்கிறேன் என் உள்ளத்து உணர்வுகளை வாசிப்பீர் நண்பர்களே குறை இருந்தால் தெரிவிக்கவும்... பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்க வேண்டும் என்ற எந்த முன்னறிவும் இல்லாத குடும்ப சூழல் . அருகில் இருக்கக்கூடிய திருவள்ளுவர் கல்லூரி தான் நான் செல்ல வேண்டிய நிலம் என்பதை இறைவன் எனக்கு அறிவித்தான்.
படம்
 

. மலரும் நினைவுகள்|

படம்
'  ' பள்ளிக்கல்வித்துறையில். சமச்சீர் கல்வி என்று 2010-11 ஆம் கல்வி ஆண்டில் புதிய  பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2016ல் பின்பு உதயச்சந்திரன் ஐயா அவர்கள் தலைமையில் பாடத்திட்டக்குழு அமைக்கப்பட்டு ஆறாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புக்கு 2016ல் புதிய பாடப்புத்தகங்கள் வெளியிட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்கு வந்தது..அந்தப் புத்தகங்களை நடத்துவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆசிரியர்களுக்கு பயிற்றுவிக்க ஆசிரியர்கள் தேவை. பொட்டல் புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியராகப் பணிபுரிந்த என்னை தாம்பரம் அருகேயுள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நடக்கும் பயிற்சியில் கலந்துகொள்ள துறை விதித்தது. தமிழ்ப் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பட்டியலில் மூலைக்கரைப் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை சகோதரி திருமதி சாரதா, சகோதரர் திரு. சுரேஷ் ஆகிய மூன்று பேரும் அப்பயிற்சியில் கலந்துகொண்டோம். அந்த பயிற்சி நிகழ்வில் ஒருங்கிணைபாளர் அம்மா திருமதி. சங்கீதா, இணை ஒருங்கிணைப்பாளர் திருமதி. செல்வி ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. அதை இறைவன் கொடுத்த நல் வாய்ப்பாக நினைத்த...

ஆசிரியர் பணி அறப்பணியா?

படம்
 ஆசிரியர் பணி அறப்பணி அப்பா சொன்னதாக ஞாபகம் அர்ப்பணித்தேன் என்னை இப்போது புரிகிறது சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்று கூறி  அவனை சோத்துக்கே கையேந்த வைத்துவிட்டனர்... இப்போது ஆசிரியரையும் அறிவில்லாதவனாக்க முயற்சி செய்து இப்போது நீக்க மற நிறைத்துவிட்டீர் ஏகாதிபத்திய உரிமைகள் பறிப்பு ஓய்வூதிய முரண்பாடு, பணியைத் திணித்தல், மாணவனை எதிரி ஆக்குதல், பெற்றோரையும் எதிரி ஆக்குதல் சமூகத்தின் பார்வையில் எந்த ஆசிரியரும் நல்லாசிரியர் கிடையாது.... நவீன கருவிகள் எனக்கு  எதற்கு கையில்  எழுதுகோல் பிடித்தவர்கள்  ஏளனம் செய்தனர்... நவீன ஆசிரியருக்கும் வயிறு வளர்க்கும்  ஆசிரியராக மார்அடிப்பாயே என்றார்கள். காகிதக் குப்பைகளைக் குறைக்க கணிப்பொறி திறன் பேசி என்று அரசு  மாறியது -அந்தோ வயிறு வளர்க்கும் ஆசிரியர்  மாற மறுத்தனரே... என் பாட்டன் ஆசிரியர் தாத்தாவும் ஆசிரியரே  அம்மா அப்பா மனைவி அத்தை மாமன் வயிறு  வளர்க்கும் ஆசிரியரே... எதற்காக இந்த பெருமை அகத்தியர் தொல்காப்பியர் திருவள்ளுவர், கம்பன் வரிசையில்  வரவேண்டும் நான் என்று  முனைப்புடன் நான்....