ஆய்வுச்சுருக்கம்:

    

 இக்கட்டுரையானது மலையாள படைப்பாளியாக அறிய்பட்ட வைக்கம் முகமது பஷீர் அவர்களின் படைப்புத்திறன் உத்திகள் பற்றிய அறிவையே வெளிப்படுத்துகிறது.  அவரது படைப்புகளில் பால்ய கால சகி என்ற நாவல் சிறப்பானதாகும்.  தமிழில் காலச்சுவடு பதிப்பகம் மூலம் மொழிபெயர்ப்பாக வந்திருக்கும் இக்குறு நாவல்  பஷீர் அவர்களின் படைப்பளுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.  தொல்காப்பியம் நூலுக்குரிய உத்திகள் 32 எனக்கூறுகிறது.  அக்காலத்திய உத்திகளே ஆனாலும் நாம் தற்கால நாவல்களுக்கும் பொருத்திப் பார்த்து அடையாளப்படுத்துவதே நோக்கமாகும்.  மொழிபெயர்ப்பின் வெற்றிக்குக் காரணம் மூலபடைப்பில் ஆசிரியர் கையாண்டிருக்கும் உத்திகளின் வெளிப்பாடுகளாகும்.   பால்யகால சகி என்னும் குறுநாவல் பின்னோக்கு உத்தியில் புனையப்பட்டதாகும்.  “பல்வகைச் சிறப்படை இலக்கியம் கருத்து அல்லது பொருளை அடிப்படையாக உடையது.  அக்கருத்து தகுந்த சொற்களாலும் ஏற்புடைச்செய்யுள் அல்லது உரைநடை வடிவாலும் ஒரு படைப்பாக உருக்கொள்கிறது.  வெளியீட்டுத்திறனும் முழுவமைப்புக்குச் செவ்வி சேர்க்கின்றன.  ஆக்குவோனின் படைப்பாற்றலும், தனித்தன்மையும் ஒவ்வொரு கூறிலும் வெளிப்படும்போது புலமை வன்மை தெரிகின்றது.  அதனை நுனித்து உணர்ந்து கொள்ள உத்தியாய்வு உதவுகின்றது” என்கிறார் ச.வே. சுப்பிரமணியன் ( நூல்: இளங்கோவின் இலக்கிய உத்திகள்  பக்: 5)  செய்யுள்களுக்கு  குறிப்பாக தொல்காப்பியர் கால இலக்கியங்களுக்கு அவர் வகுத்துள்ள உத்திகள் பொருந்தியிருக்கலாம்.  இக்கட்டுரை பால்யகால சகி நாவலுக்குப் பொருத்தமாக அமைந்த உத்திகளை மட்டுமே கொண்டு ஆய்வு  செய்யப்பட்டுள்ளது.

  முன்னுரை

     மலையாள எழுத்துலகம் மிகப் பரந்து  விரிந்தது.   தமிழ் மொழிக் குடும்பத்தில் உதித்த மலையாள படைப்புலகம் எளிமையான கருப்பொருள்களை மையமாகக் கொண்டிருந்தது.  தமிழில் முதல் இலக்கண நூலாகக் கிடைக்கும் தொல்காப்பியம் போன்றே மலையாளத்தில் லீலா திலகம் முதல் இலக்கணநூலாகக் கிடைக்கிறது.  லீலாதிலகத்தின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  கிபி 1385 – 1400 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டது என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  (கீற்று – அ.கா.பெருமாள்)(இரண்டு மலையாள இலக்கண நூற்கள் - இளங்குளம் குஞ்சன் பிள்ளையின் கூற்று) லீலாதிலகத்தை எழுதிய ஆசிரியர் தொல்காப்பியம் ,வீரசோழியம், சேந்தன் திவாகரம் கற்றறிந்தவர் என்பதையும் இளங்குளம் குஞ்சன் பிள்ளை குறிப்பிடுகிறார்.  எனவே தமிழ் மலையாள உறவு என்பது தாய் மகள் உறவு போல என்பதை இலக்கிய உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.  1960 களில் மலையாள நாவவல்கள் வேகமாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன.  தகழியின் ஏணிப்படிகள், கயிறு போன்ற நாவல்களை சி.ஏ.பாலன் அவர்கள் மொழிபெயர்த்துக் கொணர்ந்தார்.   குளச்சல் எம். யூசுப் அவர்களும் சுகுமாரன் அவர்களும் வைக்கம் முகம்மது பஷீர் அவர்களின் கதைகளை மொழிபெயர்த்தனர்.  இருமொழி அறிவும் பெற்றிருந்தால் தான் சுவை உணர்வைப் பெற முடியும் என்றிருந்த நிலையை இவர்களது பெயர்ப்புகள் மாற்றின. குளச்சல் யூசுஃப் வைக்கம் முகம்மது பஷீரின் “பால்யகால சகி” என்ற நாவலை மலையாளத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. 

வைக்கம் முகம்மது பஷீர் அறிமுகம்

     கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் அருகே  தலையோலைப்பறம்பில் 1908ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் நாள் வைக்கம் முகம்மது  பஷீர் பிறந்தார்.  அவரது தந்தை திரு. கண்ணீத்ர வைப்பேல் காயி அப்து ரஹிமான் ஆவார்.  தாய் திருமதி. பாலசேரி குஞ்ஞ}தாச்சும்மா. அந்த பெரிய குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பிறந்து விட்ட அவருக்கு உடன் பிறந்த சகோதரர்கள் மூன்று பேர், சகோதரிகள் இரண்டு பேர்.  தன் குடும்பப் பாத்திரங்களையும் சில படைப்புகளில் மாந்தராக்கியிருப்பார்.  காந்தியவாதியாக பல போராட்டங்களில் போராடியவர். தன் பிள்ளைப் பருவ நிறைவேறாக் காதலையே பிற்காலத்தில் பால்யகால சகியாக எழுதினார்.  தன் சமூகப்பணிகளுக்கு பிள்ளைப்பருவக் காதல் தோல்வியே காரணமாகியது. 

“பால்யகால சகி” நாவல் அறிமுகம்

     பால்யகால சகி 1944 ஆம் வருடம் வெளிவந்தது.  இந்த ஆண்டில் தான் பஷீர் அவர்களின் தந்தை மறைந்தார்.  பால்யகால காதல் வலிகள் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்திருப்பதன் வெளிப்பாடாக இந்நாவலைப் படைத்தார்.  சாதாரணமாகக் கடந்து போகும் சம்பவங்களை படிக்கும் வாசகர்களுடைய மனத்தில் பதியவைக்கிறார்.  துன்பமும் துயரமும் நிறைந்த காதல் கதை.  எதிர்மறைப் பாத்திரங்கள் இல்லாமல் சம்பவங்களே நாவலில் சுவையைக் கூட்டுகிறது.  வர்க்கவேறுபாடுகள் நிறைந்த எளிய இஸ்லாமிய குடும்பங்களின் தலைவன் தலைவியாகவே காணப்படுகிறது.  கதை மாந்தர்களாக மஜீது, சுஹரா வாழ வைக்கப்பட்டுள்ளனர்.  இந்நாவலைப் படித்து முடிக்கும் போது நம் கண்களின் ஓரம் கண்ணீர் சுரந்து விடுகிறது. 

இலக்கிய உத்திகள் அறிமுகம்:

     இலக்கியப் படைப்பு படைப்பாளியின் அனுபவம் அதை வெளிப்படுத்தி வாசகனின் உள்ளத்தில் ஏற்படுத்தும் சுகானுபவம் தொடர்புடையது.  படைப்பளியின் தனித்தன்மையைக் காட்டுவதற்காக அவர் படைப்பில் கையாண்டுள்ள உத்திகளை ஆய்வு செய்வது வழக்கமாகும்.  “சிறப்புடை இலக்கியம் கருத்து அல்லது பொருளை அடிப்படையாக உடையது.  அக்கருத்து தகுந்த சொற்களாலும் ஏற்புடைச் செய்யுள் அல்லது உரைநடை வடிவாலும் ஒரு படைப்பாக உருக்கொள்கிறது.  வெளியீட்டுத்திறனும் முறையும் முழுவமைப்புக்குச் செவ்வி சேர்க்கின்றன.   ஆக்குவோனின் படைப்பாற்றலும், தனித்தன்மையும் ஒவ்வொரு கூறிலும் வெளிப்படும்போது புலமை வன்மை தெரிகின்றது.   அதனை நுனித்து உணர்ந்து கொள்ள உத்தியாய்வு உதவுகின்றது”.1 

(நூல். இளங்கோவின் இலக்கிய  உத்திகள்.  நூலாசிரியர் ச.வே. சுப்பிரமணியன்) உத்தி என்ற சொல் புதியதன்று.  தொல்காப்பிய வரிகளில் உத்தி என்ற சொல் பயன்படுத்தப்பட்டு;ள்ளது.  “ஒத்த காட்சி உத்திவகை விரிப்;பின்…(தொல். மரபு.110 )  என்ற நூற்பா செய்யுளின்  உத்திகளாக  முப்பத்திரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது.


                இதனை    “ ஒத்த காட்சி உத்தி வகை விரிப்பின்


                           நுதியது அறிதல் அதிகார முறையே


                           தொகுத்துக் கூறல் வகுத்து மெய்ந்நிறுத்தல்


                           மொழிந்த பொருளொடு ஒன்ற வைத்தல்


                           மொழியாததனை முட்டு இன்றி முடித்தல்


                           வாராததனான் வந்தது முடித்தல்


                           வந்தது கொண்டு வாராதது உணர்த்தல்


                           முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றே


                           ஒப்பக்கூறல் ஒரு தலை மொழிதல்


                           தன் கோள் கூறல் முறை பிறழாமை


                           பிறன் உடன்பட்டது தான் உடம்படுதல்


                           இறந்தது காத்தல் எதிரது போற்றல்


                           மொழிவாம் என்றல் கூறிற்று என்றல்


                           தான் குறியிடுதலல் ஒருதலை அன்;மை


                           முடிந்தது காட்டல்  ஆணை கூறல்


                           பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல்


                           தொகு;த மொழியான் வகுத்தனர் கோடல்


                           மறுதலை சிதைத்துத் தன் துணிபு உரைத்தல்


                           பிறன் கோள் கூறல் அறியாது உடம்படல்


                           பொருள் இடையிடுதல் எதிh பொருள் உணர்த்தல்


                           சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல்


                           தந்து புணர்ந்து உரைத்தல் ஞாபகம் கூறல்


                           உய்த்துக் கொண்டு உணர்த்தலொடு மெய்ப்பட


                           நாடிச்


                           சொல்லிய ல்ல பிற அவண் வரினும்


சொல்லிய வகையான் சுருங்க நாடி


மனத்தின் எண்ணி மாசு அறத்


தெரிந்து கொண்டு


இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்


நுனித்தகு புலவர் கூறிய நூலே” என்று தன் நூற்பா வழியே


தொல்காப்பியர் கூறுகிறார்.  இதையே பிற்காலத்தில் நன்னூலார் கீழ்க்கண்டவாறு நூற்பா வாயிலாக விளக்குகிறார். 


உத்தி என்ற சொல்லின் விளக்கம்:


பால்ய கால சகி கதைச்சுருக்கம்:


     வசதியான வீட்டு; பையன் மஜீது, அவன் வீட்டு அருகில் உள்ள ஏழைச் சிறுமி சுகறா. அவர்களிருவரும் குழந்தைப்பருவம் முதல் கிழப்பருவம் எய்தும் வரையிலான கதையாக வளர்கிறது.


தொடரும்……


                           

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறள் அறக்கட்டளை நடத்திய திருவள்ளுவர் தினம்

ஆசிரியர் பணி அறப்பணியா?

நானும் - நூலகமும்