ஆசிரியர் பணி அறப்பணியா?

 ஆசிரியர் பணி

அறப்பணி

அப்பா சொன்னதாக ஞாபகம்

அர்ப்பணித்தேன் என்னை

இப்போது புரிகிறது

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்

என்று கூறி 

அவனை சோத்துக்கே கையேந்த

வைத்துவிட்டனர்...

இப்போது ஆசிரியரையும்

அறிவில்லாதவனாக்க முயற்சி செய்து

இப்போது நீக்க மற நிறைத்துவிட்டீர்

ஏகாதிபத்திய உரிமைகள் பறிப்பு

ஓய்வூதிய முரண்பாடு,

பணியைத் திணித்தல்,

மாணவனை எதிரி ஆக்குதல்,

பெற்றோரையும் எதிரி ஆக்குதல்

சமூகத்தின் பார்வையில் எந்த ஆசிரியரும்

நல்லாசிரியர் கிடையாது....

நவீன கருவிகள் எனக்கு 

எதற்கு கையில் 

எழுதுகோல் பிடித்தவர்கள் 

ஏளனம் செய்தனர்...

நவீன ஆசிரியருக்கும் வயிறு வளர்க்கும் 

ஆசிரியராக மார்அடிப்பாயே

என்றார்கள். காகிதக் குப்பைகளைக்

குறைக்க கணிப்பொறி

திறன் பேசி என்று அரசு 

மாறியது -அந்தோ

வயிறு வளர்க்கும் ஆசிரியர் 

மாற மறுத்தனரே...


என் பாட்டன் ஆசிரியர்

தாத்தாவும் ஆசிரியரே 

அம்மா அப்பா மனைவி

அத்தை மாமன் வயிறு 

வளர்க்கும் ஆசிரியரே...

எதற்காக இந்த பெருமை

அகத்தியர் தொல்காப்பியர்

திருவள்ளுவர், கம்பன் வரிசையில் 

வரவேண்டும் நான் என்று 

முனைப்புடன் நான்....





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறள் அறக்கட்டளை நடத்திய திருவள்ளுவர் தினம்

நானும் - நூலகமும்