இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
ஆசிரியர் பணி அறப்பணியா?
ஆசிரியர் பணி அறப்பணி அப்பா சொன்னதாக ஞாபகம் அர்ப்பணித்தேன் என்னை இப்போது புரிகிறது சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்று கூறி அவனை சோத்துக்கே கையேந்த வைத்துவிட்டனர்... இப்போது ஆசிரியரையும் அறிவில்லாதவனாக்க முயற்சி செய்து இப்போது நீக்க மற நிறைத்துவிட்டீர் ஏகாதிபத்திய உரிமைகள் பறிப்பு ஓய்வூதிய முரண்பாடு, பணியைத் திணித்தல், மாணவனை எதிரி ஆக்குதல், பெற்றோரையும் எதிரி ஆக்குதல் சமூகத்தின் பார்வையில் எந்த ஆசிரியரும் நல்லாசிரியர் கிடையாது.... நவீன கருவிகள் எனக்கு எதற்கு கையில் எழுதுகோல் பிடித்தவர்கள் ஏளனம் செய்தனர்... நவீன ஆசிரியருக்கும் வயிறு வளர்க்கும் ஆசிரியராக மார்அடிப்பாயே என்றார்கள். காகிதக் குப்பைகளைக் குறைக்க கணிப்பொறி திறன் பேசி என்று அரசு மாறியது -அந்தோ வயிறு வளர்க்கும் ஆசிரியர் மாற மறுத்தனரே... என் பாட்டன் ஆசிரியர் தாத்தாவும் ஆசிரியரே அம்மா அப்பா மனைவி அத்தை மாமன் வயிறு வளர்க்கும் ஆசிரியரே... எதற்காக இந்த பெருமை அகத்தியர் தொல்காப்பியர் திருவள்ளுவர், கம்பன் வரிசையில் வரவேண்டும் நான் என்று முனைப்புடன் நான்....
நானும் - நூலகமும்
பொதிகை வாசகர் வட்டம் கொடுத்த சிறப்பு விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலகத்தில் தன்னார்வ வாசகர்கள் இணைந்த ஓரு அமைப்பு பொதிகை வாசகர் வட்டம் செயல்படுகிறது. 2024 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் வாசகர்வட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. என் இளங்கலைத்தமிழ்ப் பேராசிரிர் திரு.பா. வல்சகுமார் பொருளாளர் ஆக என்னை முன்மொழிந்தார் . வாசகர்வட்ட கூட்டம். இதுவரை சமுதாயப் பணியை மக்களிடம் இருந்து விலகி மாணவர்களிடம் மட்டுமே செயல்படுத்திக் கொண்டிருந்த நான் நூலகத்துடன் இணைந்தேன். சிறு வயது முதலே சாதி மதம் பேதம் இல்லாமல் வளர்ந்த எனக்குப் பொதுமக்களில் ஒருவனாக இருந்து நூலகத்தில் பயணிப்பது கடினமாக இல்லை. வாசகர்வட்ட உறுப்பினர்கள் வீடுகளில் நடக்கும் விழாக்களில் முழு மனதோடு கலந்து கொள்ள ஆரம்பித்தேன். நூலகங்களில் நடக்கும் விழாக்களில் அதிகம் கலந்து கொண்டு விடுவேன் ... சில நேரங்களில் சேர முடியாமல் போய்விடும். நூலக வார விழா - 2024 ல் நடந்த பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள 17.11.2...



கருத்துகள்
கருத்துரையிடுக